தம்பியின் பல்

தம்பியின் பல். தம்பி தரம் ஒன்றில் படிக்கின்றான்.இன்று பாடசாலையால் வந்தும் யாருடனும் கதைக்காது வீட்டிற்குள் சென்றான்.நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. தம்பியைத் தேடினோம்.ஒரு மூலை மறைவில் அழுதுகொண்டிருந்தான்.வீட்டில் எல்லோரும் பயந்துவிட்டோம். அம்மாவைக் கண்டதும் பயந்து பெரிதாக அழுதான்.தொலைந்துவிட்டது. பாடசாலை முடியும் நேரம்தான்.தேடித்தேடிப் பார்த்தேன்.காணவில்லை என்றான். ஏதாவது பொருட்களைத் தொலைத்தால் அம்மா பேசுவார் .என்ன தொலைந்துவிட்டது என்று கேட்டோம் . எனது பல் என்றான் .எங்களுக்கு ஒரே சிரிப்பு.அம்மா தம்பியைக் கட்டியணைத்து முத்தமிட்டார்.அம்மா மெதுவாக ஏதோ சொன்னார்.தம்பியும் ஏல்லோருடனும் சேர்ந்து பற்கள் தெரிய சிரித்தான்.